
- This event has passed.
பட்டமளிப்பு விழா 2024
June 14, 2024 @ 6:30 pm - 8:30 pm
Event Navigation
இந்தாண்டு, நம் பள்ளியில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, வரும் வெள்ளிக்கிழமை மாலை 6:30மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினாராக பேராசிரியர் முனைவர் திருமிகு.சுப்புலட்சுமி மோகன் அவர்கள் பங்கேற்கிறார்.
முனைவர் திருமிகு.சுப்புலட்சுமி மோகன் அவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் நுண்கலைப் புலத்தின் இயக்குனராகப் பணியாற்றுகிறார். இவர் பல வருடங்கள் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். வேல்ஸ் பல்கலைகழகம், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வு நெறியாளராகச் செயலாற்றுகிறார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் இசைத்துறைகளில் ஆய்வாளராகவும் புத்தகப் பரிந்துரை குழுக்களிலும் பணியாற்றுகிறார்.
இவரது படைப்புகள் : தமிழ் இசை கருவூலம், நரம்பு மற்றும் காற்று இசை கருவிகள், முத்துத் தாண்டவர், சம்பந்தர் மற்றும் காரைக்கால் அம்மையார் பற்றிய ஆய்வு கட்டுரைகள். இவர் எழுதிய “தமிழ் இசை இலக்கணம்” தமிழக அரசு கல்லூரிகளில் பாடப்புத்தகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் “கலை சுடர்மணி” விருது, இலங்கை மற்றும் மதுரையைச் சார்ந்த பல்வேறு கழகங்களின் மூலம் ‘பண்ணிசைத் தென்றல் ‘, ‘பண்ணிசைச் செல்வி’ , ‘இளைய பாரதி’ என பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்.
வெள்ளிக்கிழமை , சூன் 14, 2024 | மாலை 6:30 மணி
Community Middle School Auditorium, Plainsboro
தமிழ் அறிவோம், தமிழராய் இணைவோம்…
Leave a Reply