பாரதியார் விருது

வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் தனித்துவமாகச் செயல்படும் ஆசிரியர்களுக்குபாரதியார் விருது2023 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. பாடத்திட்டம், இலக்கணம், போட்டிகள், தமிழ் மொழி, வரலாறு, இலக்கியம் சார்ந்த தனித்துவமான செயல்பாடுகள் மற்றும்  பள்ளியைச் சார்ந்த சில முக்கியமான முன்னெடுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்குபாரதியார் விருதுவழங்கப்படுகிறது.

பாரதியார் விருது – 2023

2023 ஆம் ஆண்டு பாரதியார் விருது பெற்ற ஆசிரியர்கள்

சங்கீதா இராமகிருஷ்ணன்தமிழ்த்தேனீ போட்டியில் நம் பள்ளி வெற்றிகள் பெற முன்னோடியாக இருந்தவர். தமிழ்த்தேனீப் போட்டியில் வள்ளலார் தமிழ்ப் பள்ளி வெற்றி பெற்றமைக்குக் காரணமாக இருந்தமையால் பாரதியார் விருதினை பெறுகிறார்.

ஶ்ரீமதி ஜெயராம்தமிழ் வாசிப்பு தமிழ்நாட்டிலேயே மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மாணவர்களை தமிழ் வாசிப்பில் ஆர்வம் கொள்ள வலையொளி என்ற முயற்சியைத் தொடங்க காரணமாக இருந்தவர். தமிழ் வாசிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியமைக்காக பாரதியார் விருதினை பெறுகிறார்.

சரண்யா இராமலிங்கம்தமிழில் வாக்கியங்கள் எழுதுவதற்கு இலக்கணம் அவசியம். அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு எளிமையாக தமிழ் இலக்கணங்களைப் புரிய வைப்பது சவால் நிறைந்தது. இலக்கணங்களை மிகவும் எளிமையாக மாணவர்களுக்கு சரண்யா கற்றுத் தருகிறார். அவரது தனித்துவமான முயற்சிக்கு பாரதியார் விருது வழங்கப்படுகிறது.

நடராசன் வைரவன்வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் அர்பணிப்புடன் பணியற்றிதுடன் மட்டுமில்லாமல் தலையாலங்கானம் போன்ற தனித்துதுவமான வரலாறு சார்ந்த முயற்சிகளுக்காகவும் பாரதியார் விருது பெறுகிறார்.

விருது பெற்ற அனைவருக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்