Pongal 2026 | பொங்கல் 2026
வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா நம் பள்ளி மாணவர்களின் மொழித் திறமையை வெளிப்படுத்தும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது.
கலைநிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைக்கிறோம்.
விழா விவரங்கள்:
பொங்கல் விழா நாள்: ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி - 8
நேரம்: நண்பகல் 12 மணி முதல்
இடம்: Community Middle School, Plainsboro
Pongal 2026 | பொங்கல் 2026 போட்டிகள்
-
மழலைப் பாடல்கள் போட்டி
- போட்டி நடைமுறை:
- பள்ளித் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மழலைப் பாடல்கள் மட்டுமே போட்டிக்கான பாடல்கள்
- ஒவ்வொரு மாணவரும் அதிகபட்சமாக இரண்டு மழலைப் பாடல்களைப் பாடலாம்
- வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
- தமிழ் உச்சரிப்பு
- நடித்துக் காட்டுதல்
- பாடல்களை சரளமாகப் பாடுதல்
- பாடல்கள் எண்ணிக்கை
- Contest Materials
- போட்டி நடைமுறை:
-
மாறுவேடப் போட்டி
- போட்டி நடைமுறை:
- இப்போட்டி, விழா மேடையில் நடைபெறும்.
- மாணவர்கள், தமிழ்ப் பண்பாடுச் சார்ந்த வேடங்களை அணியலாம். தமிழர் வரலாறு சார்ந்த வேடங்கள், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் போன்ற தமிழ், தமிழர், தமிழ்நாடு சார்ந்த வேடங்களை மாணவர்கள் அணிய வேண்டும். இதைச் சாராத மாறுவேடங்களுக்கு அனுமதி இல்லை.
- மதம்/கடவுள் வேடம் சார்ந்த மாறுவேடங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
- தற்போது இருக்கும் அரசியல் தலைவர்கள், இந்தியாவின் பிற மாநிலத் தலைவர்கள் சார்ந்த மாறுவேடங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
- வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
- ஆடை - Costume
- கற்பனைத்திறன் - Creativity
- நடித்துக்காட்டுதல், மேடைப்பேச்சு - Performance & Speech
- போட்டி நடைமுறை:
-
பேச்சுப் போட்டி
- போட்டி நடைமுறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளே போட்டிக்கான தலைப்புகள்
அரும்பு, மொக்கு பிரிவுகள்
- கதை சொல்லப் போகிறேன்
- திருக்குறள் கதைகள்
- ஆத்திசூடி கதைகள்
- எனக்குப் பிடித்த சுற்றுலாத் தளம்
- என் கனவு
மொட்டு பிரிவு
- எனக்குப் பிடித்த திருக்குறள்
- நானும் தமிழ்ப் பள்ளியும்
- என் தமிழ் மொழி
- எனக்குப் பிடித்த சுற்றுலாத் தளம்
- என் கனவு
- தமிழ் - கற்றதும் பெற்றதும்
மலர் & பூ பிரிவுகள்
- செயற்கை நுண்ணறிவு
- யாதும் ஊரே யாவரும் கேளிர்
- போர் இல்லாத உலகம்
- யாம் அறிந்த மொழிகளிலே...
- சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்
- எனக்குப் பிடித்த சுற்றுலாத் தளம்
- என் கனவு
- உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
இந்த தலைப்புகளை தவிர வேறு எந்த தலைப்புகளுக்கும் அனுமதி இல்லை. மதம், அரசியல் சார்ந்த கருத்துக்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
- வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
- சரளமாகப் பேசுதல்
- சிறந்தக் கருத்துக்களுடன் பேசுதல்
- தமிழ் உச்சரிப்பு
- தலைப்பையொட்டி பேசுதல்
- போட்டி நடைமுறை:
-
ஆத்திசூடி போட்டி
- போட்டி நடைமுறை:
- நம் பள்ளி இணையத்தளத்தில் ஆத்திசூடி பாடல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. நம் பள்ளி இணையத்தளத்தை மட்டுமே மாணவர்கள் இந்தப் போட்டிக்கு பயன்படுத்த வேண்டும்.
- ஆத்திசூடியில் மொத்தம் 109 பாடல்கள் உள்ளன. மாணவர்கள் இந்தப் பாடல்களை வரிசையாகக் கூற வேண்டும். ஒரு மாணவர் எத்தனை வேண்டுமானாலும் கூறலாம். எண்ணிக்கை முக்கியம் அல்ல.
- ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்படும்.
- ஐந்து நிமிடங்களுக்குள் கூறப்படும் ஆத்திசூடி பாடல்களுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- வரிசையாக ஆத்திசூடி பாடலை மட்டும் கூறினால் போதுமானது. பொருள் தேவையில்லை
- மலர் மற்றும் பூ பிரிவு மாணவர்களுக்கு மட்டும் : நடுவர்கள் மாணவர்கள் ஒப்புவிக்கும் ஏதேனும் ஒரு சில ஆத்திசூடி பாடல்களுக்கு பொருளை கேட்பார்கள். கேட்கும் பாடலின் பொருளை கூற வேண்டும்.
- வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
- சரளமாகக் கூறுதல் ( Fluency) - 10 மதிப்பெண்கள் (அனைத்து பாடல்களுக்கும் சேர்த்து)
- சரியாகக் கூறுதல் (Correctness) - ஒவ்வொரு ஆத்திசூடி பாடலுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும்.
- சரியான உச்சரிப்பு (Pronunciation) - 10 மதிப்பெண்கள் (அனைத்து பாடல்களுக்கும் சேர்த்து)
- பொருள் - மலர்/பூ மட்டும்
- Contest Materials
- போட்டி நடைமுறை:
-
தமிழ்த்தேனீப் போட்டி
- போட்டி நடைமுறை:
- தமிழ்த்தேனீப் போட்டியில், நம் பள்ளி மாணவர்கள் மாநில/மண்டல அளவிலும், தேசிய அளவிலும் தொடர்ந்து பல முக்கியப் பரிசுகளை வென்று வருகின்றனர். இந்தாண்டு, பொங்கல் விழாவில் நடைபெறும் தமிழ்த்தேனீப் போட்டி மூலமாக நம் பள்ளி அணிக்கான குழுவினர் தேந்தெடுக்கப்பட உள்ளனர்.
Levels in Tamil Theni
- Please refer the Tamil Theni Website tamiltheni.org/competition/
- வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
- சரியாகக் கூறுதல் (Correctness)
- சரியான உச்சரிப்பு (Pronunciation)
- Contest Materials
- போட்டி நடைமுறை:
-
குறள் தேனீப் போட்டி
- போட்டி நடைமுறை:
- குறள் தேனீ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள திருக்குறள்கள் மட்டுமே போட்டிக்கான திருக்குறள்கள்.
- குறள் தேனீ என்பது திருக்குறள்களைப் படிக்க ஊக்குவிக்கும் போட்டி ஆகும். அதனால் எண்ணிக்கை என்பது இங்கு முக்கியம் அல்ல. தமிழர்களின் மறைநூலான திருக்குறளை நம்முடைய அடுத்தத் தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே நம்முடைய நோக்கம்.
- Participants are welcome to recite any number of Kurals without a minimum limit. Children, in particular, are encouraged to recite even 1 or 2 Kurals. While we highly value participation, it is worth noting that reciting a greater number of Kurals may enhance your chances of success in the competition.
- Kindly be advised that participants have the flexibility to recite the Kurals in any order of their choosing. However, should they opt for a different sequence, it is imperative that they furnish the judges with a printed copy of the Thirukkurals in the exact order of their recitation. This will assist the judges in following the Kurals.
போட்டி பிரிவுகள்
- குறள் தேனீ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளும், நம் பள்ளி பிரிவுகளும் வேறு வேறானவை
- நம் பள்ளி பிரிவுகளை பெற்றோர்கள் கவனித்து அதற்கேற்ப தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்
- The number of Kurals for each group is listed below. Please ensure this matches our school group classifications. For example, Arumbu, Mokku, and Mottu students are required to memorize 35 Kurals, which corresponds to the Arumbugal category on the Kural Theni website.

குறள் தேனீப் போட்டி இரண்டு சுற்றுகளாக நடைபெறும்முதல் சுற்றுப் போட்டி
- மாணவர்கள் தாங்கள் கற்ற குறள்களை வரிசையாகக் கூற வேண்டும்.
- அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
இறுதிச்சுற்றுப் போட்டி
- ஒரு குறளின் அதிகாரத்தை கொடுத்து அதற்கான திருக்குறள்களை கூற சொல்லுதல்
- மலர் மற்றும் பூ பிரிவு மாணவர்களுக்கு மட்டும் - குறளுக்கு பொருளைக் கூறுதல். மனப்பாடம் செய்யாமல் ஒரு குறளின் பொருளை உணர்ந்து கூறுதலுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- உதாரணமாக கேள்விகள் இப்படி இருக்கலாம்.
- கல்வி அதிகாரத்திலிருந்து ஒரு குறள்
- நன்றி பற்றிய திருக்குறள்
- வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
- சரளமாக கூறுதல் ( Fluency)
- சரியாக கூறுதல் (Correctness)
- தன்னம்பிக்கையுடன் கூறுதல் ( Confidence)
- பொருள் - மலர்/பூ மட்டும்
- Contest Materials
- போட்டி நடைமுறை:
-
கலைநிகழ்ச்சிகள்
- போட்டி நடைமுறை:
Pongal Cultural Event Dance Performance Guidelines
Performance Requirements:- Group Size: Minimum 10+ participants
- Theme: Must be culturally authentic and related to Pongal & Tamil traditions
- Restrictions:
- No cinema songs allowed
- Selection based on compelling cultural theme
- First come, first served basis
- Folk Dances:
- Mayilaatam : Performers dress like peacocks, mimicking graceful movements
- Karakaatam : Dancing while balancing pots on their heads
- Kolattam : Dancers move in circular motions while striking sticks rhythmically
- Other Tamil Folk art forms
- Ensure proper participant preparation
- Support children\'s cultural engagement
- Help coordinate group participation
- Performances should honor harvest festival traditions
- Emphasize secular community spirit and cultural heritage
- வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
- All participants will be given medals. No winners will be selected for cultural events.
- போட்டி நடைமுறை:
பிரிவுகள்
Pre-k 1 and Pre-k2 students
Kindergarten, Grade-1, Accelerated Grade-1 Students
Grade 2, 3 Students
Grade 4, 5 Students
Grade 6,7,8 Students
Registration is closed for: Pongal 2026 | பொங்கல் 2026.