கடந்த மூன்று நாட்களாக வட கரொலைனா மாநிலம், இராலே நகரில் நடைபெற்ற வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் “தமிழ் விழாவில்” பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் நம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுப் பரிசுகளை வென்றனர். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது சாதாரண வெற்றி அல்ல. பல மாதங்களின் கடுமையான உழைப்புக் கொடுத்த வெற்றி. தேசிய அளவிலான போட்டி எப்பொழுதுமே கடினமானது. பல மாநிலங்களைச் சேர்ந்த மிகவும் திறமையான மாணவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் ஒவ்வொரு இடத்திற்குமான இடைவெளி மிகவும் குறைவு. ஒரு சிறு பிழை கூட போட்டியில் இருந்து வெளியேறும் சூழ்நிலையை ஏற்படுத்தும். இவ்வாறான கடும் போட்டியில் வெற்றிப் பெற தொடர்ச்சியான பயிற்சிகள் அவசியம். அப்படியான தொடர் பயிற்சிகளை மாணவர்கள் தங்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் மேற்கொண்டதால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. ஒரு சிறு தவறு கூடச் செய்யாமல், முதலிடம் பெற்றுள்ள மாணவர்களின் வெற்றியை நாம் கொண்டாட வேண்டும்.
போட்டிகளில் வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்…
குறள் தேனீ
மொட்டுகள் பிரிவு
முதலிடம்
லோகேஷ் இளங்கோவன்
சிறப்பு பரிசு
பிரயன்னா ஷான் ஆனந்த்
படைப்புத்தேனீ
முதலிடம்
ஓவியா தனராஜ் ஜெயந்தி
கலைத் தேனீ
நான்காம் இடம்
ஓவியா தனராஜ் ஜெயந்தி
தேனீ-1 – முதலிடம்
நிதுலன் மலரவன், சாய் தருணிகா ராஜதுரை
தேனீ-2 – முதலிடம்
அதிதி நாராயணமூர்த்தி, இனியா துரைசுவாமி
தேனீ-3 – முதலிடம்
சிவானி ஆதிமூலம், நிரல்யா சீனிவாசன்
தேனீ-4 – முதலிடம்
சகானா ஸ்ரீஜெகன்நாதன், கிரிஷ் கார்த்திக் இளங்கோவன்
ஆசிரியர்கள்
கிருத்திகா சரவணபவன், கல்பனாதேவி புண்ணியகோட்டி, திவ்யா பழனிசாமி, நம்பி ஆதிமூலம், கீர்த்தனா கோபால், சிறிமதி ஜெயராமன், கிருத்திகா அருண், சரண்யா ராமலிங்கம்
உங்கள் வெற்றியில் வள்ளலார் தமிழ்ப் பள்ளி பெருமை கொள்கிறது.



நன்றி,
சசிகுமார் ரெங்கநாதன்,
பள்ளி முதல்வர்
Leave a Reply