Loading Events

« All Events

  • This event has passed.

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

December 11, 2021 @ 11:00 am - 1:30 pm

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டில் பிறந்து, 1921ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தன்னுடைய 39 ஆம் வயதில் காலமானார். மிகவும் குறுகியக் காலமே இந்த மண்ணில் வாழ்ந்த பாரதி, இன்றளவும் கொண்டாடப்படும் கவிதைகளைப் படைத்துள்ளார். இந்த ஆண்டு பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவு ஆண்டாக அவரது பெருமைகளை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. 

மகாகவி பாரதியின் நினைவைக் கொண்டாடும் வகையில், அவருடைய பிறந்த தினமான டிசம்பர் 11ஆம் தேதியன்று, பாரதியின் நினைவு நூற்றாண்டு விழாவை நடத்த வள்ளலார் தமிழ்ப் பள்ளி முடிவு செய்துள்ளது.

பாரதியின் நினைவைக் கொண்டாடும் வகையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக இந்த நினைவு நூற்றாண்டு விழா இணையம் மூலமாக நேரலையில் நடைபெறும்.

நேரலை சுட்டி : njvallalarpalli.org/live

நாள் : டிசம்பர் 11 ஆம் தேதி, சனிக்கிழமை

நேரம் : காலை 11 மணி (EST)

 

Details

Date:
December 11, 2021
Time:
11:00 am - 1:30 pm
Website:
https://njvallalarpalli.org/live
Comments are closed.