மழலை வகுப்புகள்

மழலை - 1 (3 வயது மாணவர்களுக்கான வகுப்பு) | PreK-1 (For 3-year-olds)

மழலை வகுப்பு ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறும். இவ்வகுப்பில் மாணவர்கள் கேட்டல், பேசுதல், வாசித்தல் திறன்களைக் கற்றுக் கொள்கின்றனர். மேலும் நிறங்கள், பறவைகள், பூக்கள், காய்கறிகள், உடல் உறுப்புகள் ஆகியவை சார்ந்த தமிழ்ச் சொற்களை மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். மழலைப்பாடல்கள், கதைகள் வகுப்பில் முக்கியமாக கற்றுத்தரப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களுக்குத் தமிழ் மொழி அறிமுகப்படுத்தப்படுகிறது.

வகுப்பின் குறிக்கோள்:

  • தமிழ்ச் சொற்களை அறிதல், பேசுதல் 
  • பாடல்கள், கதைகள் மூலம் தமிழ் கற்பித்தல்.

PreK-1 (For 3-year-olds) — The class is conducted for only one hour.
In this class, students develop listening, speaking, and reading skills. They also learn Tamil vocabulary related to colors, birds, flowers, vegetables, and body parts. Nursery rhymes and stories are the primary focus of the lessons. Through these activities, students are introduced to the Tamil language.

Class Objectives:

  • Recognize and speak Tamil words

  • Learn Tamil through rhymes and stories

மழலை - 2 (4 வயது மாணவர்களுக்கான வகுப்பு) | PreK-2 (For 4-year-olds)

மழலை வகுப்பு குழந்தைகளை தமிழ் மொழியில் பேச வைப்பது தான் எங்களுடைய முதன்மையான குறிக்கோளாக உள்ளது. எளிமையான வகுப்பு நடைமுறை மூலம் தமிழ் மொழியை மழலைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறோம்.

நிறங்கள், எண்கள், காய்கறிகள், பழங்கள், தமிழர்களின் பண்டிகைகள், பண்பாடு ஆகியவை மழலை வகுப்புப் பாடத்திட்டத்தில் உள்ளன. இவற்றை நாங்கள் கதைகள், மழலைப்பாடல்கள், விளையாட்டுகள், பாடல்கள் பாடுதல், நடனமாடுதல் ஆகியவற்றின் மூலம் சொல்லித் தருகிறோம்.

தமிழர் பண்டிகைகளைப் பற்றிய பாடங்கள், பாடத்திட்டங்களைப் பேச்சுத்தமிழ் மூலம் குழந்தைகளுக்குக் கொண்டு செல்கிறோம். அவர்களின் வீடுகளில் நடைபெறும் தகவல்களைக் கேட்டு அதனைத் தமிழிலேயே பேச கற்றுக்கொடுக்கிறோம். அவர்களுக்குப் பிடித்த காய்கறிகள், பழங்கள் பற்றிக் கேட்டு அதையும் தமிழிலேயே பேச வைக்கிறோம். இவ்வாறு அன்றாட வாழ்க்கைச் சூழலில் இருந்து எளிமையாக அவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்து ஆங்கிலச் சூழலில் இருக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறான கற்பித்தல் மூலம் தமிழில் பேசும் வாய்ப்பு வகுப்பில் கிடைக்கிறது. இதனைப் பெற்றோர்கள் தங்களின் வீடுகளிலும் தொடர எளிமையான வீட்டுப்பாடங்களும் வழங்கப்படுகின்றன. மழலை வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது. மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. மகிழ்ச்சியான வகுப்பறை மூலம் தமிழ் கற்பிக்க முயற்சிகள் செய்கிறோம்.

இவ்வாறு பாடல்கள், விளையாட்டு, நடனம் ஆகியவற்றின் மூலம் எளிமையான பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு எங்கள் வகுப்பில் கொண்டுச் செல்கிறோம்.

PreK-2 (For 4-year-olds)

The primary goal of the Prek-2 class is to get children to speak in Tamil. We introduce the Tamil language to young children through a simple and engaging class approach.

The PreK-2 class curriculum includes topics such as colors, numbers, vegetables, fruits, Tamil festivals, and culture. We teach these through stories, nursery rhymes, games, singing, and dancing.

Lessons and curriculum about Tamil festivals are conveyed in spoken Tamil. We encourage children to talk in Tamil about events happening in their homes. We ask them about their favorite vegetables and fruits and guide them to respond in Tamil. In this way, Tamil is taught simply through everyday life situations.

For children born and raised in the U.S. and growing up in an English-speaking environment, this method gives them the opportunity to speak in Tamil during class. Simple homework is also given so that parents can continue this learning at home.

There are no tests or grades for Mazhalai class students. We focus on teaching Tamil in a joyful classroom environment.

Through songs, games, and dance, we bring an easy-to-follow curriculum to our students in the class.