பாவேந்தர் விருது

வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருமே தன்னார்வலர்கள் தான். ஒவ்வொரு வாரமும் அக்கறையுடன் தமிழ்ப் பள்ளிக்கு வந்து தமிழ் வகுப்புகளை நடத்துகிறார்கள். தங்களுடைய அன்றாடப் பணி, குடும்ப வேலைகளைக் கடந்து, தொடர்ச்சியாக தமிழ் வகுப்புகளை எடுப்பது சவால் நிறைந்தது. இத்தகைய பல சவால்களுக்கு மத்தியிலும், அதிக விடுப்பு எடுக்காமல் ஒவ்வொரு வாரமும் தமிழ்ப் பள்ளிக்கு அர்பணிப்புடன் வரும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரில் ஒரு விருதினை வழங்குகிறோம்.

At Vallalar Tamil School, all our teachers are dedicated volunteers. Every week, they passionately conduct Tamil classes, balancing their professional and family responsibilities. Despite several challenges, they consistently show up with minimal absences. To honor those teachers who have perfect attendance, we are introducing an award named after the esteemed poet Bharathidasan, starting this year (2024).

பாவேந்தர் விருது பெறும் ஆசிரியர்கள்

  • சசிபிரபா ரத்தினசாமி
  • பிரேமா கண்ணன்
  • கிருத்திகா அருண்
  • பிரகாவதி வடிவேல்
  • சங்கீதா இராமகிருஷ்ணன்
  • வெங்கடேஷ் கஜபதி